ADDED : ஜன 27, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் சார்பில் தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தாசில்தார் சடையாண்டி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் பாண்டிமாதேவி முன்னிலை வகித்தார். காந்தி சிலையில் துவங்கி பஜார்,பஸ் ஸ்டாண்டு வரை மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கபட்டது. பள்ளி தாளாளர் சாகுல்ஹமீது, தலைமையாசிரியர் காஜா நிஜாமுதீன் குரைசி பங்கேற்றனர்.

