UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 10:06 PM
அ நிறம் | அளவு
கமுதி: கமுதியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வட்டார மேலாளர் மயில்ராஜ் தலைமை வகித்தார். கமுதி ஒன்றிய அலுவலகத்தில் துவங்கி முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்றனர். அப்போது கமுதி வட்டார இயக்கத்தின் மூலம் வாய்ப்புகளை அணுகுவதில் இருந்து தன்னிச்சையாக முடிவெடுக்கும் நிலையை நோக்கி வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை அடைய வாழ்வாதார மற்றும் வாய்ப்புகள் மூலம் பெண்களை வலுப்படுத்துதல் என்ற கருத்தை கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
பின்பு அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதில் கமுதி வட்டாரத்தில் உட்பட்ட 200க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.
