ADDED : மார் 22, 2025 05:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
வேர்ல்ட் விஷன், சில்ட்ரன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட், தொண்டி கோல்டன் ரோட்டரி கிளப் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆரோக்கிய மேரிசாராள் தலைமை வகித்தார்.
விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், தண்ணீரின் அவசியம், மழை நீர் சேகரிப்பு, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டி கோஷமிடப்பட்டது. துாய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.