/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடிதம் எழுதுவதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்
/
கடிதம் எழுதுவதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : நவ 12, 2024 11:51 PM

ராமேஸ்வரம் ; 'கடிதம் எழுதுதல் மகிழ்ச்சி' என்ற பெயரில் கடிதம் எழுதுவதை வலியுறுத்தி தபால் துறை அதிகாரிகள் டூவீலரில் 2050 கி.மீ.,விழிப்புணர்வு ஊர்வலமாக நேற்று ராமேஸ்வரம் வந்தனர்.
இந்திய தபால் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்.14 முதல் டிச.15 வரை நடக்கிறது. 'கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி, டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்' என்ற தலைப்புகளில் போட்டி நடத்தப்படுகிறது.
கடிதம் எழுதுதலை வலியுறுத்தி தபால்துறை வணிக மேம்பாட்டு இயக்குனர் திஷாபண்ணு தலைமையில் 13 அதிகாரிகள் அக்.9ல் பெங்களூருவில் இருந்து 13 டூவீலர்களில் விழிப்புணர்வு ஊர்வலம் புறப்பட்டு புதுச்சேரி, தஞ்சாவூர் வழியாக நேற்று ராமேஸ்வரம், தனுஷ்கோடி வந்தனர்.
இவர்கள் நாளை கன்னியாகுமரி, மூணாறு வழியாக நாளை மறுநாள் மைசூரு செல்ல உள்ளனர். முன்னதாக ராமேஸ்வரத்தில் தனியார் பள்ளியில் மாணவர்களிடையே நடந்த கடிதம் எழுதும் போட்டியை ஆய்வு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தபால் துறை ராமநாதபுரம் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் செய்திருந்தார்.
இப்போட்டியில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.50,000, ரூ.25,000, ரூ. 15,000ம், தமிழக அளவில்ரூ.25,000, ரூ.15,000, ரூ.10,000 பரிசு வழங்கப்பட உள்ளது.

