
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்புத்துறையினர் சார்பில் தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் சண்முகவேல் தலைமை வகித்தார். நிலைய அலுவலர் மார்ட்டின் ஸ்டீபன் ராஜ் தலைமையில் தீயணைப்புத்துறையினர் விபத்தில் காயம் அடைந்தால் முதலுதவி, குடியிருப்புகளில் இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்பது, சமையல் காஸ் கசிந்து தீப்பற்றினால் தற்காப்பு உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். தீ விபத்து ஏற்பட்டால் செயல்படுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.