/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆயுதபூஜை எதிரொலி: பழங்கள், காய்கறிகள் விலை உயர்வு
/
ஆயுதபூஜை எதிரொலி: பழங்கள், காய்கறிகள் விலை உயர்வு
ADDED : அக் 12, 2024 04:27 AM

ராமநாதபுரம்: ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு, ராமநாதபுரம் சந்தையில் பூஜா பொருட்கள் வாங்க மக்கள்குவிந்தனர். பூக்கள், பழங்கள், காய்கறிகள் விலை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
வெளியூர்களிலிருந்து காய்கறி, பழங்கள், பூக்கள்வாங்கி வந்து ராமநாதபுரம் சந்தை, கிராமங்களில் வாகனங்களில் வைத்து விற்கின்றனர். நேற்று ஆயுதபூஜை, இன்று விஜயதசமி எதிரொலியாக காய்கறிகள், பூக்கள், பழங்களின் தேவை அதிகரித்துள்ளது.
வரத்து குறைந்து விலை கடந்த வாரத்தை காட்டிலும் இருமடங்கு விலை உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம் அரண்மனைபகுதியில் பழங்கள், அலங்காரப் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். வாழைமரக்கன்று ஜோடி ரூ.20 - ரூ.50க்கும் தரத்திற்கு ஏற்றவாறு விற்றது.
இதேபோல கொய்யா, மதுளை, ஆரஞ்சு ஆகிய பழங்கள் ஒன்று ரூ.20க்கும், ஆப்பிள் என விலை வழக்கத்தை விட கிலோவிற்கு ரூ.20 முதல் ரூ.30 வரை கூடுதலாக வைத்து விற்றனர். பூக்களை பொறுத்தமட்டில் கதம்பம் முழம் ரூ.30 வரையும், மாலைகள் ரூ.100 - ரூ.400 வரை அளவிற்கு ஏற்றவாறு விற்றனர்.