
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் தொண்டாலை மேலக்கரையில் உள்ள ஆதி அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
நேற்று காலை மூலவர்கள் ஆதி அடைக்கலம் காத்த அய்யனார், கருப்பண்ண சுவாமி, அம்மையார், சீலைக்காரி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 16 வகை சிறப்பு அபிஷேக அலங்கார தீபராதனைகள் நடந்தது. முன்னதாக ஹோம வேள்விகள் நடந்தது.
பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.