/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
/
அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
ADDED : அக் 17, 2024 05:14 AM
முதுகுளத்துார்: -முதுகுளத்துார் அருகே மேல பண்ணைக்குளம் கிராமத்தில் அதிக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா நடந்தது.
பெருங்கருணை கிராமத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு பிடிமண் வழங்கப்பட்டது. கிராம மக்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். பெருங்கருணையில் தயார் செய்யப்பட்ட குதிரைகள், தவழும் பிள்ளைகளை கிராமத்திற்கு ஊர்வலமாக துாக்கி வந்தனர்.
ஆயிரம் வள்ளி அம்மன் கோயில் முன்பு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாவிளக்கு பூஜை நடந்தது.
குதிரைகள் கண் திறப்பு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக குதிரைகளை துாக்கி வந்து அய்யனார் கோயிலில் வைத்து வழிபட்டனர். விழாவில் முதுகுளத்துார், கமுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.