/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பருவமழை பெய்து விவசாயம் செழிக்க அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
/
பருவமழை பெய்து விவசாயம் செழிக்க அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
பருவமழை பெய்து விவசாயம் செழிக்க அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
பருவமழை பெய்து விவசாயம் செழிக்க அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
ADDED : அக் 01, 2025 07:50 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே மேல பண்ணைக்குளம் கிராமத்தில் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா, ஆயிரம் வள்ளியம்மன் கோயில் பூமிதி விழா நடந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெருங்கருணை கிராமத்தில் பிடிமண் வழங்கப்பட்டது.
கிராம மக்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். ஆயிரம் வள்ளியம்மன், அய்யனாருக்கு தினந்தோறும் சிறப்பு பூஜை நடந்தது.
பெருங்கருணையில் தயார் செய்து வைக்கப்பட்ட குதிரைகள், கருப்பண்ணசாமி, ராக்கச்சி,பேச்சியம்மன், பைரவர், சப்த கன்னிமார்கள் உள்ளிட்ட தவழும் பிள்ளைகள் கீழக்குளம், நல்லாங்குளம் வழியாக 7 கி.மீ., ஊர்வலமாக துாக்கி வந்தனர்.
கடந்த ஆண்டு விளைந்த தானியங்கள் வைத்து கண் திறப்பு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்பு அய்யனார் கோயிலில் வைத்து வழிபட்டனர்.
காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி, வேல்குத்தி ஊர்வலமாக ஆயிரம் வள்ளியம்மன் கோயில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விவசாயம் செழிக்கவும் பருவமழை பெய்ய வேண்டியும் இந்த குதிரை எடுப்பு விழா 75 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. விழாவில் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.