ADDED : அக் 01, 2025 07:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை வடக்கு தெரு மற்றும் தெற்கு தெரு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா செப்.,23 ல் காப்பு கட்டுதலுடன் நடந்தது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக வடக்கு தெரு முத்துமாரியம்மன் கோயில் முன்பாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதில் ஒரு பெண் பக்தர் பூக்குழிக்குள் தவறி விழுந்தார். அவரை மற்ற பக்தர்கள் உடனடியாக துாக்கி காப்பாற்றியதால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இரு கோயில்களிலும் அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது.