ADDED : அக் 01, 2025 08:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; கல்லால் அடித்து பெண் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், வாலாந்தரவை பஸ் ஸ்டாப் அருகே, 60 வயது மதிக்கத்தக்க பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கேணிக்கரை போலீசார், உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கடந்த சில நாட்களாக அப்பெ ண் அப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். அவரை மர்ம நபர்கள் தலையில் கல்லால் அடித்து, கொலை செய்து உடலை போட்டு சென்றுள்ளனர். கொலையா ளிகள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.