/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துாரில் பால்குட ஊர்வலம்
/
முதுகுளத்துாரில் பால்குட ஊர்வலம்
ADDED : அக் 29, 2024 04:54 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது.
பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள தேவர் சிலை முன்பு கணபதி ஹோமம், யாகசால பூஜைகள், வேத மந்திரங்கள் கூறி சிறப்பு பூஜைகள் நடந்தது. பின் முதுகுளத்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் 2008 பால்குடம் எடுத்து காந்தி சிலை, தேரிருவேலி முக்கு ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட் வரை ஊர்வலமாக வந்தனர்.
தேவர் சிலைக்கு பால், சந்தனம், விபூதி, மஞ்சள் உட்பட 16 வகை அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. முதுகுளத்துார், கடலாடி, சாயல்குடி அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முதுகுளத்துார் ஆப்பநாடு மறவர் சங்க நிர்வாகிகள் செய்தனர்.