/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மது, கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும்: பா.ம.க., கோரிக்கை
/
மது, கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும்: பா.ம.க., கோரிக்கை
மது, கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும்: பா.ம.க., கோரிக்கை
மது, கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும்: பா.ம.க., கோரிக்கை
ADDED : நவ 21, 2025 05:00 AM

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் மது, கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும். பள்ளி மாணவியை கொலை செய்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பா.ம.க., வலியுறுத்தியுள்ளது.
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க., செயலாளர் ஹக்கிம் தலைமையில் அக்கட்சியினர் எஸ்.பி., மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி கொலையை கண்டித்து மனு அளித்தனர். இதில் பள்ளி மாணவியை கொலை செய்தவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
ராமேஸ்வரத்தில் மது, கஞ்சா போதைப்பொருட்கள் விற்பனையை போலீசார் தடுக்க வேண்டும். போதைப்பொருட்கள் பயன்படுத்தும் இளைஞர்களின் பெற்றோர் மீதும் வழக்கு பதிய வேண்டும். மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் அரசு நிவாரணம் தர வேண்டும் என வலியுறுத்தினர்.