UPDATED : அக் 20, 2026 04:38 PM
ADDED : அக் 20, 2026 04:34 PM

அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு வீடுகள், வாகனங்களை அலங்கரிக்க வாழை மரக்கன்றுகள் வாங்குவது வழக்கம். இந்த ஆண்டு ஏராளமான வாழை மரக்கன்றுகள் திருவாடானைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. ஜோடி மரக்கன்றுகள் ரூ.40 முதல் 50 வரை விற்பனை செய்யப்பட்டது. இவை விற்பனை ஆகாமல் தேங்கியது.
வியாபாரிகள் கூறுகையில், அதிகாலையில் வாழைக்கன்றுகளை வெட்டிக் கொண்டு வந்தோம். போதிய வியாபாரம் இல்லை. மாலையில் மழை பெய்ததால் வியாபாரம் பாதித்தது. சிலர் வாழை மரக்கன்றுகளுக்கு பதில் தோரணங்கள் அல்லது மா இலையை பயன்படுத்தி திருப்தியடைந்தனர்.வாழை மரக்கன்றுகள் தேங்கியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது என்றனர்.
