/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வங்கதேச ஹிந்துக்கள் உரிமை மீட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
வங்கதேச ஹிந்துக்கள் உரிமை மீட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
வங்கதேச ஹிந்துக்கள் உரிமை மீட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
வங்கதேச ஹிந்துக்கள் உரிமை மீட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 05, 2024 05:47 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் வங்கதேச ஹிந்து உரிமை மீட்புக்குழுவின் சார்பில் ஹிந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 150க்கு மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
அரண்மனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ்., மாநிலத்தலைவர் ஆடலரசன் தலைமை வகித்தார். பா.ஜ., வின் சட்டசபை குழுத்தலைவர் நயினார்நாகேந்திரன், ஹிந்து முன்னணி மாவட்டத்தலைவர் ராமமூர்த்தி, பா.ஜ., மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மாவட்ட பொது செயலாளர்கள் மணிமாறன், மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன், பி.எம்.எஸ்., மாவட்டத்தலைவர் மோகன்ராம், வி.எச்.பி., மாவட்டத்தலைவர் சரவணன், வங்கதேச ஹிந்து உரிமை மீட்புக்குழு அமைப்பாளர் சுபகஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாகு, நகர் தலைவர் கார்த்திகேயன் பங்கேற்றனர். வங்க தேசத்தில் ஹிந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ----------