/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகள் விரக்தி: வறட்சியால் முடிவுக்கு வரும் மிளகாய் சாகுபடி
/
விவசாயிகள் விரக்தி: வறட்சியால் முடிவுக்கு வரும் மிளகாய் சாகுபடி
விவசாயிகள் விரக்தி: வறட்சியால் முடிவுக்கு வரும் மிளகாய் சாகுபடி
விவசாயிகள் விரக்தி: வறட்சியால் முடிவுக்கு வரும் மிளகாய் சாகுபடி
ADDED : ஏப் 15, 2025 05:33 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தப்படியாக ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்துார், கமுதி, சிக்கல் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் மிளகாய் சாகுபடி நடக்கிறது. இவ்வாண்டு வறட்சியின் காரணமாக, விளைச்சல் முன்கூட்டியே முடிவுக்கு வருவதால், எதிர்பார்த்த மகசூல் இன்றி ரூ.பலஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம், சுற்றுப்புற கிராமங்களில் அக்., முதல் வாரத்தில் சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் செடிகள், பிப்., முதல் வாரத்தின் மகசூல் நிலையை எட்டின. மகசூல் அடைந்த மிளகாய் செடிகளில் இருந்து பறிக்கப்பட்ட மிளகாய் பழங்கள் வெயிலில் உலர்த்த பட்டு, சந்தைக்கு வத்தலாக விற்பனைக்கு வருகின்றன. இந்த நிலையில், மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக, ஆர். எஸ். மங்கலம் வட்டாரத்தில் பெரும்பாலான இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் செடிகள் கருகி வருகின்றன. மே மாதம் வரை மகசூல் கொடுக்க வேண்டிய, மிளகாய் செடிகள் முன்கூட்டியே முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். ஆழ்துளை கிணறு, கண்மாய் நீர் பாசனம் உள்ளிட்ட ஒரு சில வயல்களில் மட்டும், தண்ணீர் பாய்ச்சி மிளகாய் செடிகள் காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் வரை செலவு செய்தும் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காதால், இவ்வாண்டு மிளகாய் சாகுபடியில் ரூ.பல ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.
--