sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பதிவெண் இல்லாத டிராக்டர்களில் மண் அள்ளுகின்றனர்; கனிமவள க் கொள்ளையை தடுக்க நடவடிக்கை அவசியம்

/

பதிவெண் இல்லாத டிராக்டர்களில் மண் அள்ளுகின்றனர்; கனிமவள க் கொள்ளையை தடுக்க நடவடிக்கை அவசியம்

பதிவெண் இல்லாத டிராக்டர்களில் மண் அள்ளுகின்றனர்; கனிமவள க் கொள்ளையை தடுக்க நடவடிக்கை அவசியம்

பதிவெண் இல்லாத டிராக்டர்களில் மண் அள்ளுகின்றனர்; கனிமவள க் கொள்ளையை தடுக்க நடவடிக்கை அவசியம்


UPDATED : ஆக 21, 2025 08:36 AM

ADDED : ஆக 20, 2025 11:22 PM

Google News

UPDATED : ஆக 21, 2025 08:36 AM ADDED : ஆக 20, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி: மாவட்டத்தில் உள்ள கண்மாய், ஊருணிகளில் விவசாயப் பணி மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு தேவையான வண்டல் மண் மற்றும் களிமண் எடுப்பதற்கு ஜூலை மாதம் அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், பதிவெண் இல்லாத டிராக்டர்களில் மண் அள்ளுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலை உள்ளது. கனிமவளத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயம், மண்டபாண்ட தொழிலுக்கு மண் தேவைப்படுபவர்கள் ஆன்-லைனில் விண்ணப்பித்து தாசில்தார் இடம் அனுமதி வாங்குகின்றனர். தற்போது யூனியன் கண்மாய் மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய்களில் டிராக்டர்கள் மூலமாக இயந்திரங்களின் உதவியுடன் மண் அள்ளும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பல இடங்களில் பொதுப்பணித்துறை சார்பில் உள்ள கண்மாய்கள் மற்றும் நீர் நிலைகளில் களிமண், வண்டல் மண் எடுப்பதற்கு உரிய அனுமதி உள்ள நிலையில் அவற்றை கண்காணித்து முறையாக மண் எடுக்க வேண்டும்.

குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக மண் அள்ளுகின்றனர். இதைதடுக்க உரிய முறையில் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் பார்வையிட வேண்டும்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கனிமவளத் துறையினர் முறையாக டோக்கன் வழங்கி நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கனிமவள கொள்ளை நடக்காமல் கண்காணிக்க வேண்டும்.

குறிப்பாக கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஆன்லைன் மூலமாக 170 விண்ணப்பங்கள் வரை தற்சமயம் பெறப்பட்டுள்ளன. இங்கு பல டிராக்டர்கள் மற்றும் ட்ரெய்லர்களில் பதிவெண்கள் (ரிஜிஸ்ட்ரேஷன்) இல்லாத நிலையில் மண் அள்ளும் போக்கு தொடர்கிறது. நம்பர் போர்டை கழட்டிய நிலையில் இயங்கும் வாகனங்களால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இவ்வாகனம் விபத்தில் சிக்கினால் நிவாரணம் பெற இயலாது. எனவே முறையாக பதிவெண்கள் எழுதப்பட்ட வாகனங்களை சாலைகளில் இயக்க அனுமதிக்க வேண்டும்.

இவ்விஷயத்தில் ராமநாதபுரம் மாவட்ட கனிமவள அதிகாரிகள் மற்றும் பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தினர் ஆய்வு செய்ய வேண்டும். விதி மீறல்களில் ஈடுபடக்கூடிய டிராக்டர்களின் உரிமையாளருக்கு அபராதம் விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலாடி தாசில்தார் முருகேசன் கூறுகையில், ஆன்-லைன் விண்ணப்பித்துள்ள நபர்களில் தகுதியுள்ளவர்களுக்கு மண் அள்ள அனுமதி வழங்கப்படுகிறது. நீர்நிலைகளில் மண் எடுப்பதை கண்காணிக்கிறோம். பதிவுஎண் இல்லாத டிராக்டர்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

---






      Dinamalar
      Follow us