/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் விபத்தை தடுக்க தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் தடுப்பு வேலி

ADDED : அக் 10, 2024 02:22 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பனில் திறக்கப்படவுள்ள புதிய ரயில் பாலத்தில் ரயில் விபத்தை தடுக்க தேசிய நெடுஞ்சாலையுடன் ரயில் பாதை இணையும் இடத்தில் பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.
பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி முடிந்த நிலையில் இறுதி கட்டமாக துாக்கு பாலத்தை பொருத்தி ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. இப்பணி முடிந்ததும் அக்டோபர் இறுதியில் ரயில் போக்குவரத்தை துவக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக பயணிகள் பெட்டிகளுடன் பாம்பன் பாலத்தில் சோதனை ஓட்டம் நடக்க உள்ளது.
இந்நிலையில் புதிய ரயில் போக்குவரத்து துவங்கியதும் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பாம்பன் பாலத்தை ரயில்கள் கடந்து செல்லும் போது இதன் மேலே உள்ள பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில்
நின்றபடி வேடிக்கை பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்தில் மேலிருந்து கீழே செல்லும் ரயில் மீது விளாமல் தடுக்க ரோடு பாலத்தில் நேற்று 8 அடி உயரம், 12 அடி அகலத்தில் இரும்பில் தடுப்பு வேலி அமைத்தனர்.
இதனால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாக்கப்படுவதுடன், எதிர்பாராத விபத்தை தடுக்க முடியும் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.