/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதி செய்ய வேண்டும்
/
விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதி செய்ய வேண்டும்
விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதி செய்ய வேண்டும்
விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதி செய்ய வேண்டும்
ADDED : ஏப் 06, 2025 05:35 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் இரு மையங்களிலும் குடிநீர், கழிப்பறை வசதி உட்பட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலருக்கு நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய இரு விடைத்தாள் திருத்தும் மையங்கள் இருப்பதால் ஆசிரியர்கள் விரும்பிய மையங்களில் பணி செய்ய அனுமதிக்க வேண்டும். ஒரே வருவாய்மாவட்டம் என்பதால் பணி மூப்பு அடிப்படையில் முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மதிப்பெண் சரி பார்க்கும் அலுவலர் பணியையும் மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கும், உதவி பெறும் பள்ளியின் மூத்த முதுகலை ஆசிரியருக்கும்வழங்க வேண்டும். மூத்த முதுகலையாசிரியர்கள் தலைமையாசிரியராக பொறுப்பு வகிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணி ஒதுக்கீடு செய்யாமல் இருக்க செய்ய வேண்டும்.
காலை, மாலை இரு வேளையிலும் கூடுதல் விடைத்தாள் திருத்த சொல்வதால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு சுணக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அனுமதிக்கப்பட்ட விடைத்தாள்கள்மட்டுமே வழங்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் மையங்களில் குடிநீர், மின்சார வசதி, இருக்கை வசதி, கழிப்பறை வசதிகள் சரியாக செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.