ADDED : மே 10, 2025 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா மே 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை 8:45 மணிக்கு தேரோட்டம் நடந்தது.
வல்மீகநாதர் பிரியாவிடையுடன் அமர்ந்த தேரும், பாகம்பிரியாள் அம்மன் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக மணிகண்டன் குருக்கள், வல்மீகநாத குருக்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு தேர்கள் கோயில் முன்பு நிறுத்தப்பட்டது.
மீண்டும் மாலை 4:35 மணிக்கு தேர்கள் இழுக்கப்பட்டு மாலை 6:00 மணிக்கு நிலைக்கு சென்றது. தேவஸ்தான செயல் அலுவலர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் திருவெற்றியூர் கிராமத்தினர் கலந்து கொண்டனர். ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்தனர்.