/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் தொடர்ந்து மாயமாகும் பாரத் நெட் திட்ட பேட்டரிகள்; ஊராட்சிகளில் இன்டர்நெட் சேவை பாதிப்பு

ADDED : ஜூலை 08, 2025 10:36 PM
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் பாரத் நெட் திட்டத்தில் ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள பேட்டரிகள் தொடர்ந்து மாயமாகி வருவதால் ஊராட்சிகளில் இன்டர்நெட் சேவை பாதிப்படைந்துள்ளது.
மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் சார்பில் அறிமுகம் செய்யப்பட்ட பாரத் நெட் திட்டம் இந்தியாவின் அனைத்து கிராமங்களையும், கிராம பஞ்சாயத்துகளையும், டிஜிட்டல் முறையில் இணைப்பதற்கான பிராட்பேண்ட் இணைப்பை வழங்கு வகையில் உருவாக்கப்பட்ட திட்டமாகும்.
நாட்டிலுள்ள 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளையும் இணைத்து அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் 1 ஜிபி அளவிலான அதிவேக இணைய இணைப்பை வழங்குவதே திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அதன்படி தமிழகத்தில், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் ஊராட்சி சேவை மையம் கட்டடங்களில் திட்டத்திற்கான மின்கலம், யு.பி.எஸ்., ரவுட்டர், ரேக் மற்றும் கண்ணாடி இழை போன்ற உபகரணங்கள் அமைக்கப்பட்டு இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆர். எஸ்.மங்கலம் ஒன்றியம் செவ்வாய்பேட்டை, ஏ.ஆர்.மங்கலம், வடக்கலுார், கூடலுார் உள்ளிட்ட ஊராட்சிகளில் இத்திட்டத்திற்கான பேட்டரிகள் மற்றும் உபகரணங்கள் கடந்த சில வாரங்களாக மாயமாகி உள்ளன.
இதனால் ஊராட்சிகளில் இணையதள சேவை மேற்கொள்ள முடியாமல் ஊழியர்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து ஊராட்சி செயலாளர்கள் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.