/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அம்மன் கோயில் விழாவில் பீமன் வேடம் நிகழ்ச்சி
/
அம்மன் கோயில் விழாவில் பீமன் வேடம் நிகழ்ச்சி
ADDED : ஆக 05, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழாவில் பீமன் வேடம் நிகழ்ச்சி நடந்தது.
இக்கோயிலில் ஜூலை 25 ல் காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு மண்டக படிதாரர்களின் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இரட்டையூரணி கிராமத்தார்களின் மண்டகப்படி நிகழ்வாக பீமன் வேடம் நிகழ்வு நடைபெற்றது. கோயிலில் இருந்து துவங்கிய இந்நிகழ்வு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. மேளதாள இசைக்கு ஏற்ப இளைஞர்கள் ஆட்டம் ஆடி மகாபாரத நிகழ்வுகளை எடுத்துரைத்தனர். மாலையில் மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது.