/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
துாய்மையை வலியுறுத்தி பெங்களூரு முதல் தனுஷ்கோடி வரை சைக்கிள் பிரசாரம்
/
துாய்மையை வலியுறுத்தி பெங்களூரு முதல் தனுஷ்கோடி வரை சைக்கிள் பிரசாரம்
துாய்மையை வலியுறுத்தி பெங்களூரு முதல் தனுஷ்கோடி வரை சைக்கிள் பிரசாரம்
துாய்மையை வலியுறுத்தி பெங்களூரு முதல் தனுஷ்கோடி வரை சைக்கிள் பிரசாரம்
ADDED : அக் 02, 2025 03:59 AM

முதுகுளத்துார் : பெங்களூரைச் சேர்ந்த இரு வாலிபர்கள் தனுஷ்கோடி வரை 681 கி.மீ., உலக இதய தினம், தேசிய அளவில் சுத்தமே சேவையை வலியுறுத்தி சைக்கிள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூருவில் இந்திய பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவன பணியாளர்கள் கோ கிரீன் குழுவைச் சேர்ந்த சுமந்த் ஜி சோகன் 30, தலைமையில் உலக இதய தினம், தேசிய அளவில் சுத்தமே சேவையை வலியுறுத்தி பெங்களூரில் இருந்து தனுஷ்கோடி வரை சைக்கிள் பிரசாரம் துவக்கினர். அப்போது இந்த பயணத்தின் போது ஆரோக்கிய வாழ்க்கை முறை, ஒற்றுமை, சுத்தமான சுற்றுச்சூழல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் வலியுறுத்தினர்.
கோ கிரீன் குழு சுமந்த் ஜி சோகன், மார்ட்டின் 30, ஆகியோர் பெங்களூரில் இருந்து தனுஷ்கோடி வரை 681 கி.மீ., சைக்கிளில் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் வந்தனர்.
சுமந்த்ஜி சோகன் கூறியதாவது: நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு சைக்கிள் மிதிப்பும் தனுஷ்கோடி நோக்கி மட்டுமல்ல வலிமையான சுத்தமான ஆரோக்கியமான இந்தியாவை நோக்கியதாகும். தற்போது வரை 560 கி.மீ. துாரம் வந்துள்ளோம். மேலும் 100 கி.மீ. பயணித்தால் எங்களது இலக்கான தனுஷ்கோடி இந்தியாவின் கடைசி முனையை அடைவோம். இலக்கு அடைந்தவுடன் சுத்தமான சேவை 2025 குறித்து சிறப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம் என்றார். முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் அவர்களுக்கு அப்பகுதியினர் மாலை அணிவித்து பாராட்டி வழியனுப்பினர்.