/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கருங்குடி விலக்கு நிழற்குடை சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்
/
கருங்குடி விலக்கு நிழற்குடை சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்
கருங்குடி விலக்கு நிழற்குடை சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்
கருங்குடி விலக்கு நிழற்குடை சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : அக் 02, 2025 03:56 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் செல்லும் ரோட்டில், கருங்குடி விலக்கில் சேதமடைந்துள்ள பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.
திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மேல்ப்பனையூர் விலக்கிலிருந்து ஆனந்துார் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டில், கருங்குடி விலக்கில் அப்பகுதி பொதுமக்கள் பயனடையும் வகையில் பயணியர் நிழற்குடை அமைந்துள்ளது.
இதன் மூலம், கடந்த சில ஆண்டுகளாக மழை வெயில் காலங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பயனடைந்து வந்தனர்.
இந்த நிலையில், பயணியர் நிழற்குடை முறையாக சீரமைப்பு செய்யப்படாததன் காரணமாக, நிழற்குடை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே அதிகாரிகள் சேதமடைந்த பயணியர் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.