/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இளையோர் குழுக்களுக்கு ஒருங்கிணைப்பு பயிற்சி
/
இளையோர் குழுக்களுக்கு ஒருங்கிணைப்பு பயிற்சி
ADDED : அக் 02, 2025 03:17 AM
ஆர்.எஸ்.மங்கலம், : காவிரி வளர்ச்சி திட்டம் மற்றும் ஏ.ஆர்.டி., தொண்டு நிறுவனம் சார்பில் ஆதரவு இளையோர் குழுக்களுக்கான ஒருங்கிணைப்பு பயிற்சி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் மவுசூரியா தலைமை வகித்தார். முன்னாள் யூனியன் தலைவர் ராதிகா முன்னிலை வகித்தார். ஏ. ஆர்.டி., செயலாளர் ஜோசப் வின்சென்ட் வரவேற்றார்.
இளைஞர்கள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடைகளாக உள்ள சமுதாய சீர்கேடுகள் குறித்தும், அவர்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. பி.டி.ஓ.,க்கள் கிருஷ்ணன், லிங்கம், துணை பி.டி.ஓ., தாஸ், ஏ.ஆர்.டி., இயக்குனர் டோலோ வின்சி, தீபம் இந்தியா அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.