ADDED : செப் 27, 2025 11:33 PM

ராமநாதபுரம்:முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 13 வயதிற்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கு 15 கி.மீ., பெண் களுக்கு 10 கி.மீ., நடந்தது. 15, 17 வயதிற்கு உட்பட்ட வர்கள் பிரிவில் ஆண் களுக்கு 20 கி.மீ., பெண் களுக்கு 15 கி.மீ., இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 215 மாணவர்கள் பங்கேற்றனர். 13 வயது பிரிவில் கபில் சபரி, 15 வயது பிரிவில் கருப்பசாமி, 17 வயது பிரிவில் பிரசன்னாவும் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், மிதிவண்டி சங்கத் தலைவர் ஹரிமுகன் பிரபு, ஹாக்கி சங்கத் தலைவர் கிழவன்சேதுபதி சான்றிதழ், பரிசுகளை வழங்கினர்.
முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ரூ.5000, இரண்டாம் இடம் ரூ.3000, மூன்றாம் இடம் ரூ.2000, 4 முதல் 10ம் இடம் வரை வந்தவர் களுக்கு தலா ரூ.250 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.