/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மக்கும், மக்காத குப்பை பிரிக்க வேண்டுகோள்
/
மக்கும், மக்காத குப்பை பிரிக்க வேண்டுகோள்
ADDED : பிப் 19, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை, : ஊராட்சிகளில் துாய்மையின் அவசியம் குறித்து மக்கும், மக்காத குப்பையை மக்களே பிரித்து தருமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
பிளாஸ்டிக் கழிவுகளால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
வீடு தேடிவரும் துாய்மைப் பணியாளர்களிடம் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப்பொருட்களை உபயோகிக்க வேண்டும் என ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் ஊராட்சிகளில் விளம்பரப்படுத்தபட்டு வருகிறது.