தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அலைபேசியில் ஓட்டு சேகரிக்கும் பா.ஜ.,

அலைபேசியில் ஓட்டு சேகரிக்கும் பா.ஜ.,

அலைபேசியில் ஓட்டு சேகரிக்கும் பா.ஜ.,


ADDED : மார் 11, 2024 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2024 11:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை : அலைபேசியில் வாக்காளர்களிடம் மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி ஓட்டு சேகரிக்கும் முறையை பா.ஜ., கட்சியினர் கையாள்கின்றனர்.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே கட்சியினர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ., வினர் வாக்காளர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு மத்திய அரசின் திட்டங்களை கூறி பா.ஜ., விற்கு மறக்காமல் ஓட்டளியுங்கள் என்று கூறி வருகின்றனர்.

அலைபேசியில் தொடர்பு கொள்ளும் நபர் பேசியதாவது:

நான் பா.ஜ., கட்சி ஆபிசில் இருந்து பேசுகிறேன். நீங்கள் பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பணம் பெற்று பயனடைந்து விட்டீர்களா. இந்த திட்டத்தில் 11 கோடி விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். வரும் லோக்சபா தேர்தலில் நீங்கள் பா.ஜ., விற்கு ஓட்டு போடுவீர்களா.

மோடி ஆட்சியில் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள். உங்கள் ஊரில் சாலை வசதி, மருத்துவமனை, வேலைவாய்ப்பு என குறைகள் உள்ளதா. எதிர்காலத்தில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், சூர்யோதய திட்டங்கள் மூலம் நீங்கள் பயனடையலாம். ஆகவே நீங்கள் பா.ஜ., விற்கு ஓட்டு போடுங்கள் என்று பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us