ADDED : பிப் 02, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி:ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் முரளிதரன் நேற்று தொண்டி பகுதியில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக சுற்றுப்பயணம் செய்தார்.
அப்போது இரவு 9:00 மணிக்கு தொண்டி பாவோடி மைதானம் அருகே டீக்கடையில் கட்சி தொண்டர்கள் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
அச்சமயத்தில் பா.ஜ., வக்கீல் பிரிவு செயலாளர் சண்முகநாதன் காரில் கட்டியிருந்த கட்சிக்கொடியை சிலர் கிழித்து விட்டு தப்பி சென்றனர். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.