ADDED : பிப் 26, 2024 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கல் ; சிக்கல் பஸ்ஸ்டாப் அருகே கடலாடி கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் மத்திய அரசின் பத்தாண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. கடலாடி கிழக்கு ஒன்றிய தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் முன்னிலை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் கதிரவன், மாவட்ட பொதுச் செயலாளர் மணிமாறன், மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் பத்தாண்டு கால சாதனைகளை கிராமங்கள் தோறும் வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்ய கூட்டத்தில் பேசப்பட்டது.

