/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பா.ஜ., தலைவர் நாளை ராமநாதபுரம் வருகை
/
பா.ஜ., தலைவர் நாளை ராமநாதபுரம் வருகை
ADDED : நவ 11, 2025 11:31 PM
ராமநாதபுரம்: தமிழக பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை (நவ.,13) ராமநாதபுரத்தில் நடை பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த மாதம் மதுரையில் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' எனும் தலைப்பில் முதல் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
ஒவ்வொரு நாளும் ஒரு மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள், மக்களை சந்தித்து வருகிறார். ராமநாதபுரத்தில் நவ.,13ல் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
மாவட்ட தலைவர் முரளிதரன் கூறியதாவது: ராமநாதபுரம் அரண்மனை அருகே நவ.,13 மாலை 5:00 மணிக்கு தொடங்கும் பொதுகூட்டம் இரவு 8:00 மணிக்கு நிறைவடையும். மாலை 6:00 மணிக்கு நயினார் நாகேந்திரன் உரையாற்றுவார்.
மாநில பொதுச் செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், பாலகணபதி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றார்.

