/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நிலவேம்பு கஷாயம் வழங்கும் பணி தீவிரம்
/
நிலவேம்பு கஷாயம் வழங்கும் பணி தீவிரம்
ADDED : நவ 11, 2025 11:32 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, பள்ளிகளில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு வருவோர் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளனர். காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு மருத்துமனைகளில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது.
காய்ச்சல் அதிகம் பரவுவதாக தெரிவிக்கும் பகுதிகளில் சிறப்பு முகாம் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் கஷாயத்தை பொதுமக்கள் பெற்று பயன்பெறலாம்.
மழைக்காலங்களில் காய்ச்சல் பரவுவதால் குடிநீரை கொதிக்க வைத்து பருக வேண்டும். டயர், பிளாஸ்டிக் பொருட்களில் மழைநீர் தேங்காமல் சுற்றுப்புறத்தை துாய்மையாக பாதுகாக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

