
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: நாகலாந்து கவர்னரும், பா.ஜ., மூத்த தலை வருமான இல.கணேசன் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., சார்பில் அரண்மனை அருகே இல.கணேசன் படத்திற்கு அஞ்சலி செலுத்தப் பட்டது. மாவட்ட தலைவர் முரளிதரன், பொதுச் செயலாளர்கள் சண்முகநாதன், குமார், பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
* பரமக்குடி நகர் பா.ஜ., சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டது. நகர் தலைவர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். எமனேஸ்வரம் நேருஜி மைதானத்தில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப் பினர் பங்கேற்றனர்.