/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் பா.ஜ., நகர் தலைவர் அறிமுக கூட்டம்
/
பரமக்குடியில் பா.ஜ., நகர் தலைவர் அறிமுக கூட்டம்
ADDED : ஜூலை 05, 2025 11:06 PM

பரமக்குடி: பரமக்குடி நகர் பா.ஜ., தலைவர் அறிமுக கூட்டம் மற்றும் புதிய அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
பா.ஜ., முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட பொதுச் செயலாளர் சண்முகநாதன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கண்ணன் வரவேற்றார்.
முன்னாள் மாநில துணைத்தலைவர் குப்புராமு, மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன் பேசினர். நகர் தலைவராக பொறுப்பேற்ற சுரேஷ்பாபு ஏற்புரை நிகழ்த்தினார்.
மாவட்ட பொதுச் செயலாளர் குமார், துணைத் தலைவர் பி.குமார் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
நகர், மாவட்ட பொறுப்பாளர்கள், பூத் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் ரவி நன்றி கூறினார்.