/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மோட்ச தீபம் ஏற்றிய பா.ஜ.க.,வினர் கைது
/
மோட்ச தீபம் ஏற்றிய பா.ஜ.க.,வினர் கைது
ADDED : டிச 22, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், தீபம் ஏற்றுவதற்கு அரசு தடை விதித்ததால், மன உளைச்சலில் இருந்து வந்த பூரண சந்திரன் சில தினங்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய பா.ஜ.க., சார்பில், ஒன்றிய தலைவர் வடிவேலன் தலைமையில், ஆர்.எஸ்.மங்கலம் பழைய பஸ் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பா.ஜ.க.,வினர், பூரண சந்திரன் படத்திற்கு மாலை அணிவித்து மோட்ச தீபம் ஏற்றினர்.
தொடர்ந்து, ஆர் எஸ் மங்கலம் போலீசார் மோட்ச தீபம் ஏற்றிய பா.ஜ.க.,வைச் சேர்ந்த 16 பேரை கைது செய்தனர்.

