/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போஸ்ட் ஆபீஸில் ஆதார் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதி
/
போஸ்ட் ஆபீஸில் ஆதார் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதி
போஸ்ட் ஆபீஸில் ஆதார் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதி
போஸ்ட் ஆபீஸில் ஆதார் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதி
ADDED : டிச 22, 2025 05:17 AM
சாயல்குடி: சாயல்குடியில் போஸ்ட் ஆபீஸில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக ஆதார் எடுக்கும் பணி முற்றிலும் முடங்கியுள்ளது.
சாயல்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் புதிதாக ஆதார் அட்டை எடுக்கவும், முகவரி மாற்றம் செய்யவும், திருத்தப்பட்ட ஆதார் எடுப்பதற்காக சாயல்குடி போஸ்ட் ஆபீசுக்கு வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்ச்சியாக ஆதார் குறித்த செயல்பாடு முடங்கியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். சாயல்குடியைச் சேர்ந்த வணிகர் சங்க துணைச் செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது:
சாயல்குடி போஸ்ட் ஆபீஸ்க்கு அலுவலக வேலை நாட்களில் ஆதார் அட்டை எடுப்பதற்காக பொதுமக்கள் வருகின்றனர். இங்குள்ள இயந்திரங்களில் பழுது ஏற்பட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர். நாளை வாருங்கள் என தொடர்ச்சியாக அலைக்கழிக்கும் போக்கு தொடர்கிறது. எப்போது இதற்கான தீர்வு கிடைக்கும் என தெரியவில்லை.
பெரும்பாலானோர் பள்ளி, கல்லுாரி மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்தும் ஆதார் புதுப்பிப்பதற்காக வந்தாலும் இங்கு பணிகள் நடக்காமல் காட்சி பொருளாகவே உள்ளது.
இதனால் கன்னிராஜ புரம், நரிப்பையூர் உள்ளிட்ட பகுதி களுக்கு செல்ல வேண்டி உள்ளது.
நகரின் மையப் பகுதியில் உள்ள இங்கு பொது மக்களின் நலன் கருதி கூடுதல் எண்ணிக்கையில் ஆதார் சேவை மையங்களை ஏற்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றார்.

