ADDED : ஆக 14, 2025 11:35 PM

ராமேஸ்வரம்: சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி நேற்று ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் முரளிதரன் தலைமையில் ராமேஸ்வரத்தில் தேவர் சிலையில் இருந்து ஏராளமான பா.ஜ.,வினர் தேசிய கொடியை ஏந்தியபடி ஊர்வலம் சென்றனர்.
இவர்கள் திட்டகுடி, மேலரத வீதி, கோயில் ரதவீதி வழியாக ஊர்வலமாக வந்தனர். இதில் ராமேஸ்வரம் நகர் பா.ஜ., தலைவர் மாரி, நிர்வாகிகள் பூபதி, ராமநாதன், முருகன், உட்பட பலர் பங்கேற்றனர்.
*ராமநாதபுரம் நகர பா.ஜ., சார்பில் தேசியக்கொடியுடன் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். நகர் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பரமேஸ்வரன், நகரப் பொதுச்செயலாளர்கள் பீரித்திவிராஜ், ஐஸ்வர்யா முன்னிலை வகித்தனர். வீடுதோறும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி அரண்மனையில் இருந்து வழிவிடு முருகன் கோயில் வழியாக நகரின் முக்கிய வீதிகளில் பா.ஜ.,வினர் தேசியக்கொடியுடன் மீண்டும் அரண்மனையில் ஊர்வலத்தை முடித்தனர்.