/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணியில் பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
/
திருப்புல்லாணியில் பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 26, 2024 12:55 AM
திருப்புல்லாணி : சேதுக்கரை ஊராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும், வாகன நுழைவு கட்டணத்தை ரத்து செய்யக் கோரியும் திருப்புல்லாணி ஒன்றிய பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். பார்லிமென்ட் பொறுப்பாளர் ஜி.பி.எஸ்.நாகேந்திரன் முன்னிலை வகித்தார். திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் சாமிநாதன் வரவேற்றார்.
மாவட்ட பார்வையாளர் முரளிதரன், முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு ராமச்சந்திரன், ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் சக்தி உட்பட பல பங்கேற்றனர். கண்டன கோஷங்களை எழுப்பினர்.

