/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எமனேஸ்வரம் எஸ்.என்.வி., அரசு பள்ளி முன் பா.ஜ., ஆர்ப்பாட்டம்: ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தல்

ADDED : ஜூலை 23, 2025 10:12 PM

பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் எஸ்.என்.வி., அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்ய வலியுறுத்தி பா.ஜ., மற்றும் பெற்றோர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
எமனேஸ்வரம் எஸ்.என்.வி., அரசு மேல் நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக அருள்ராஜன் 52, பணியாற்றினார். இவர் வகுப்பு களில் பாடம் எடுக்கும் போது மாணவிகளிடம் பாலியல் தொடர்பான தகவல்களை தெரிவித்து அவர்களுக்கு மனதளவில் தொல்லை செய்துள்ளார்.
8, 9, 10ம் வகுப்பு மாணவிகள் தலைமை ஆசிரியர் தர்மராஜனிடம் புகார் தெரிவித்த நிலையில் பெற்றோர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். தலைமை ஆசிரியர் புகார் படி ஜூலை 15ல் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா, ஆசிரியர் அருள் ராஜன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கில் ஆசிரி யர் அருள்ராஜன் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் மாணவி களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என கல்வித் துறை மற்றும் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
பரமக்குடி நகர் தலைவர் சுரேஷ்பாபு தங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முரளி தரன், மாநில பொதுச் செயலாளர் பாலகணபதி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் வக்கீல் சண்முகநாதன், குமார், முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர் ராமசாமி, ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் வீரபாண்டியன், நிர்வாகிகள் பிரகாஷ்ராவ், நாகராஜன், இளங்கண்ணன், சுந்தர் ராஜன், ரவி, கோகுல், முத்துலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.