ADDED : டிச 06, 2025 10:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ராமநாதபுரத்தில் பா.ஜ.,வினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக் கோரி நடந்த ஆர்ப் பாட்டத்தில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து ராமநாதபுரம்--மதுரை ரோடு புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன், கயறு வாரிய முன்னாள் தலைவர் குப்பு ராமு, பொதுச் செய லாளர் குமார் உள்ளிட்ட 50 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற் பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

