/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி சவுராஷ்ட்ரா பள்ளிகளின் ஆண்டு விழா, கலையரங்கம் திறப்பு
/
பரமக்குடி சவுராஷ்ட்ரா பள்ளிகளின் ஆண்டு விழா, கலையரங்கம் திறப்பு
பரமக்குடி சவுராஷ்ட்ரா பள்ளிகளின் ஆண்டு விழா, கலையரங்கம் திறப்பு
பரமக்குடி சவுராஷ்ட்ரா பள்ளிகளின் ஆண்டு விழா, கலையரங்கம் திறப்பு
ADDED : டிச 06, 2025 10:05 AM

பரமக்குடி: பரமக்குடி சவுராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளியில் புதிய கலையரங்கம் திறப்பு விழா மற்றும் பள்ளிகளின் ஆண்டு விழா நடந்தது.
பரமக்குடி சவுராஷ்ட்ரா கல்விக் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். துணைத் தலைவர் மனோகரன், பொருளாளர் பரசுராமன், தாளாளர்கள் மாருதிராம் (இளநிலை பள்ளி), நாகநாதன் (நர்சரி, பிரைமரி பள்ளி) முன்னிலை வகித்தனர். கல்விக் குழு செயலாளர், மேல்நிலைப்பள்ளி தாளாளர் ரெங்கன் வரவேற்றார்.
புதிய கலையரங்க கட்டடத்தை மதுரை திலீப்பாபு, ரம்யா ஆகியோர் திறந்து வைத்தனர். டாக்டர்கள் ரெங்கநாதன், கலாராணி, மதுரை நீலகண்டன் பேசினர். சவுராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளி, இளநிலை பள்ளி, தொடக்கப் பள்ளி, நர்சரி அண்ட் பிரைமரி பள்ளிகளின் ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் நாகராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். 10, பிளஸ் 2 மற்றும் அனைத்து வகுப்புகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
இளநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் போர்டை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். சவுராஷ்டிரா கல்விக்குழு நிர்வாகிகள், கவுரவ ஆலோசகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங் கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் தனசேகரன் நன்றி கூறினார்.

