/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடப்பதற்கே லாயக்கற்ற ரோட்டில் சிரமம்
/
நடப்பதற்கே லாயக்கற்ற ரோட்டில் சிரமம்
ADDED : டிச 06, 2025 10:04 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் நீதி மன்றம் அருகே உள்ள குடியிருப்புகளுக்கு ரோடு வசதியில்லாததால் மழை பெய்து ரோடு சேறும் சகதியுமாக இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்துார் நீதி மன்றம் அருகே 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் பேரூராட்சிக்கு உட்பட்ட வீடு கட்ட திட்ட அனுமதி பெற்று பெரும்பாலான வீடுகள் கட்டப்பட்டுள்ளது. பேரூராட்சி சார்பில் இப்பகுதிக்கு குடிநீர், ரோடு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை.
தற்போது வரை மக்கள் டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி குடிப்பதற்கும், அத்தியாவசிய தேவைக்கும் பயன்படுத்து கின்றனர். மழைக்காலங்களில் வீடுகளை சுற்றி தண்ணீர் குளம் போல் தேங்குகிறது. தற்போது பெய்த மழைக்கு ரோடு சேறும் சகதியுமாக இருப்பதால் நடப்பதற்கு லாயக் கற்ற ரோடாக மாறியுள்ளது.
எனவே பேரூராட்சி சார்பில் ரோடு குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

