/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பா.ஜ., கிளை கமிட்டி அமைக்கும் பணி ஜரூர்
/
பா.ஜ., கிளை கமிட்டி அமைக்கும் பணி ஜரூர்
ADDED : பிப் 05, 2025 10:09 PM
திருவாடானை; பா.ஜ., கிளை கமிட்டி அமைக்கும் பணிகள் மும்முரமாக நடப்பதாக ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முரளிதரன் கூறினார். திருவாடானையில் அவர் கூறியதாவது:
பா.ஜ, ஆட்சியின் சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களிடம் சேரும் வகையில் பிரசாரம் செய்கிறோம். ஒவ்வொரு வீட்டிலும் பா.ஜ., ஆட்சியின் ஏதாவது ஒரு திட்டம் கட்டாயம் சென்று பலன் அளித்துள்ளது. தற்போது பா.ஜ., கிளை கமிட்டி அமைக்கும் பணிகள் நடக்கிறது.
ராமநாதபுரம் ஒன்றியத்தில் 88, மண்டபம் ஒன்றியத்தில் 35, திருவாடானை ஒன்றியத்தில் (கிழக்கு) 79, மேற்கு 55, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் 81 கிளை கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் கிளை கமிட்டிகள் அமைக்கப்படுகிறது. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டங்களும் நடந்து வருகிறது என்றார்.