ADDED : நவ 07, 2025 03:54 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., மகளிர் அணி சார்பில் கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், தமிழக அரசிடம் நீதி கேட்டும் கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட மகளிர் அணி தலைவி வெள்ளையம்மாள் தலைமை வகித்தார். பா.ஜ., மாவட்டத்தலைவர் முரளிதரன் முன்னிலை வகித்தார். தமிழகத்தில் பெண் குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய மாணவிக்கு தமிழக அரசு நீதி வழங்க வேண்டும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். புதுக்கோட்டை மகளிரணி மாவட்ட செயலாளர் அமுத வள்ளி, ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., பொதுச்செயலாளர்கள் சண்முகநாதன், குமார், முன்னாள் மாவட்ட தலைவர் தரணிமுருகேசன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

