/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி நகராட்சி வாரச்சந்தை செயல்படுவது எப்போது... நெரிசல் தீர்ந்தபாடில்லை

ADDED : நவ 07, 2025 03:53 AM

பரமக்குடி: பரமக்குடி நகராட்சியில் ரூ.13.50 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தை செயல்படாமல் ரோட்டிலேயே கடைகள் விரிக்கப்படுவதால் நெரிசல் தொடர்கிறது.
பரமக்குடி வாரச்சந்தை அடிப்படை வசதிக ளின்றி இருந்த சூழலில் தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. மேலும் பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் 360 கடைகள் கூரை வசதியுடன் அமைக்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்து அக்., மாதம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து சந்தை வளாகத்தில் செயல்பட்ட நிலையில் நேற்று மீண்டும் ரோட்டோரத்தில் கடைகள் விரிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நகராட்சி சந்தை திடல் 3.25 ஏக்கரில் வணிக வளாகம் வசதியுடன் கட்டப்பட்டும் உரிய அனுமதி மற்றும் வசதிகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளது. ஆகவே சந்தை வளாகத்தை திறக்க தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இச்சூழலில் ஓராண்டுக்கு மேலாக எந்த வசதிகளும் இன்றி ரோட்டோரம் கடைகளை விரித்தாலும், வியாபாரிகள் நகராட்சிக்கு வரி செலுத்தும் நிலை உள்ளதாக வேதனை தெரிவித்தனர். சந்தை வளா கத்தை பயன்பாடிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.