/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பா.ஜ., கட்சியின் 2வது பூத் கமிட்டி ஆலோசனை
/
பா.ஜ., கட்சியின் 2வது பூத் கமிட்டி ஆலோசனை
ADDED : அக் 08, 2025 01:05 AM
திருவாடானை; திருவாடானை தொகுதியில் பா.ஜ., 2வது பூத் கமிட்டி குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. சட்டசபை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
தி.மு.க., அ.தி.மு.க., வை தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதான கட்சியின் பா.ஜ., முதலாவது பூத் கமிட்டி நடந்து முடிந்த நிலையில் இரண்டாவது பூத் கமிட்டி நடைபெறவுள்ளது.
இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருவாடானை தொகுதிக்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது: திருவாடானை தொகுதியில் 2வது பூத் கமிட்டியில் 371 அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 11 பூத் கமிட்டி பரிசீலனையில் உள்ளது. மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் உரையாற்றும் பிரதமர் மோடியின் பேச்சு நாடு முழுவதும் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று மன் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களுடன் பேசி வருகிறார்.
இப்பேச்சை அனைவரும் கேட்கும் வகையில் விழிப்புணர்வை ஏற் படுத்த வேண்டும் என்றார். பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொணடனர்.