ADDED : ஜன 01, 2025 07:51 AM
திருவாடானை :  ரோடு வசதி கோரி வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டி நடத்த இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
திருவாடானை அருகே நெய்வயல் ஊராட்சியில் ரோடு வசதி கோரியும், ஊராட்சி ஒன்றிய ரோட்டை நெடுஞ்சாலைத்துறைக்கு மாறுதல் செய்யக் கோரியும் பத்து ரூபாய் இயக்கம் சார்பில் இன்று (ஜன.1) ல் வீட்டுக்கு வீடு கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து சமாதானக் கூட்டம் நெய்வயல் ஊராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வசுமதி, ஊராட்சி தலைவர் ஆசைராமநாதன், வி.ஏ.ஓ., ஆறுமுகம் மற்றும் பத்து ரூபாய் இயக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகள் குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பேசி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

