ADDED : பிப் 20, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக நீதிமன்ற நுழைவு வாயிலில் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டது.திருவாடானையில் நீதிமன்றம் நுழைவு வாயிலில் விளக்கு எரியாததால் இருள் சூழ்ந்தது.
இதனால் போலீசார் இரவில் வழக்கில் சம்பந்தபட்டவர்களை நீதிபதியிடம் ஆஜர்படுத்த அழைத்து வரும் போது இருளில் சிரமப்பட்டனர்.
மேலும் நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலர்கள் இரவில் வீடு திரும்பும் போதும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டது.

