நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர். முதல்வர் திருவேணி தலைமை வகித்தார்.
ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் மணிமொழி முன்னிலை வகித்து ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
அப்போது 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். பெறப்பட்ட ரத்தம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.
உடன் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் நன்றி கூறினார்.