நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது. சங்கத்தின் கிளைத் தலைவர் சிக்கந்தர் பாஷா தலைமை வகித்தார்.
கிளைச் செயலாளர் சுசீந்திரன் முன்னிலை வகித்தார். 27 பேர் ரத்ததானம் செய்தனர். இதில் மின்வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மதுரை மண்டல செயலாளர் வீரசேகர் மற்றும் பொறியாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். ரத்த தான ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் நன்றி கூறினார்.